கொழும்பு மாவட்டத்திலேயே அதிக தொற்று!

நாட்டில் நேற்று அடையாளம் காணப்பட்ட 449 கொரோனா தொற்றாளர்களில் பெரும்பான்மையானவர்கள் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என கோவிட் -19 பரவல் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

கொழும்பு மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலிருந்து நேற்ற 177 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

கம்பஹாவிலிருந்து 174 பேர், இரத்னபுரியிலிருந்து 25 பேர், கேகாலையிருந்து 14 பேர் மற்றும் களுத்துறை மாவட்டத்தில் இருந்து 10 பேர் அடையாளம் காணப்பட்டனர். நுவரெலியாவிலிருந்து  12 பேர், கண்டியில் இருந்து 9 பேர், புத்தளத்தில் இருந்து 7 பேர், இரத்தினபுரியில் இருந்து 6 பேர், மட்டக்களப்பிலிருந்து 4 பேர், காலியில் இரு்து 3 பேர், மாத்தளை, ஹம்பாந்தோட்டை, மொனராகலை மற்றும் பேலியகொட பொலிஸ் நிலையத்தில் இரு்து தலா ஒவ்வொருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதன்படி தொற்றார்களின் எண்ணிக்கை 13,419 ஆக அதிகரிக்கிறது. சீனாவின் வுஹானில் COVID-19 தொற்றுநோய் தோன்றியதிலிருந்து, 13,000 க்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் பதிவான 106 வது நாடாக இலங்கை நேற்று ஆனது.

நேற்று அடையாளம் காணப்பட்ட 449 பேரில், மினுவாங்கொட- பேலியகொட கொத்தணியில் 445 பேரும், வெளிநாடுகளில் இருந்து வந்த 4 பேரும் அடங்குவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here