நாமலின் கூட்டம்: முன்வரிசையில் போயிருந்த சிறிதரன், சுமந்திரன்!

யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெறும் கலந்துரையாடல்களில் சுகாதார தரப்பினர் அதிருப்தியடைந்துள்ள நிலையில், இன்று இரண்டாவது நாளாகவும் கலந்துரையாடல் நடக்கிறது. இதில் யாழ் மாவட்ட எம்.பிக்கள் சி.சிறிதரன், எம்.ஏ.சுமந்திரன் இருவரும் கலந்து கொண்டுள்ளனர்.

நேற்று முன்தினம் யாழ் மாவட்ட செயலகத்தில் நடந்த கூட்டம், சுகாதாரத்துறையின் அறிவுறுத்தலை மீறியே நடந்தது. கொரோனா அபாய வலயமான கொழும்பிலிருந்து எந்த பரிசோதனையுமில்லாமல் அமைச்சர்களும், பரிவாரங்களும் கலந்து கொண்டனர்.

நாடாளுமன்றத்திற்குள்ளும் கொரோனா அபாயம் ஏற்பட்ட நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கொழும்பில் வசிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் இன்றும் கலந்துரையாடல் நடக்கிறது. எனினும், முன்னர் திட்டமிட்டபடி ஜி.எல்.பீரிஸ், பவித்ரா வன்னியாராச்சி ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. நாமலும், சில இராஜாங்க அமைச்சர்களுமே கலந்து கொண்டனர்.

கடந்த கூட்டத்திலும் உருப்படியான முடிவுகள் எட்டப்படவில்லை. இம்முறையும் உருப்படியான முடிவுகள் எடுக்கப்படும் வாய்ப்பில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here