கொழும்பில் பல வீட்டுத்திட்ட தொகுதிகளில் வசிப்பவர்களிற்கு நடமாட்ட கட்டுப்பாடு!

கொழும்பில் உள்ள பல வீட்டுத் திட்ட தொகுதிகளில் வசிப்பவர்களின் நடமாட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

மேற்கு மாகாணத்தின் மூத்த டி.ஐ.ஜி அலுவலகம், மெத்சந்த செவன, முவதொர யுயன, சத்ஹிரு செவன, சியாபத் செவன மற்றும் சிறிசர உயனா வீட்டு வளாகங்களில் வசிப்பவர்களின் நடமாட்டங்களிற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில், தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு நீக்கப்படுமா என்பது குறித்து அரசாங்கமும் காவல்துறையும் இன்று உத்தியோகபூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட உள்ளன.

இதேவேளை, மேல் மாகாணம் மற்றும் ஏனைய பகுதிகளில் பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நாளை காலை 5 மணியுடன் நீக்கப்பட உள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here