ஆஸ்கருக்குச் செல்லும் இலங்கை பிரச்சனையை சித்தரிக்கும் திரைப்படம்: எதிர்க்கும் கனடியத் தமிழர்கள்!

பயர்,வோட்டர் உட்பட்ட சர்ச்சைக்குரிய திரைப்படங்களை இயக்கியவரும், சர்வதேச ரீதியில் பல விருதுகள் வென்ற பிரபல திரைப்பட இயக்குனர் தீபா மேத்தாவின் புதிய திரைப்படத்திற்கு கனடியத்தமிழர்கள் மத்தியில் இருந்து எதிர்ப்பு எழுந்துள்ளது.

கனடாவின் அரச தொலைக்காட்சி நிறுவனம் சார்பாக தயாரிக்கப்பட்ட ‘funny boy’ திரைப்படம் எதிர்வரும் டிசம்பர் மாதம் திரைக்கு வரவுள்ள நிலையில் அந்தத் திரைப்படத்தில் தாம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தமிழ்க் கனேடியர்கள் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். தமிழ்க் கனேடியரான பிரபல எழுத்தாளர் ஷ்யாம் செல்வத்துரையின் நாவலைத் தழுவி இந்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. எழுத்தாளரும் இத்திரைப்பட உருவாக்கத்தில் பங்குபற்றியிருக்கிறார்.

இலங்கையைக் கதைக்களனாகவும், தமிழர்களையே மையக்கதாபாத்திரங்களாவும் இத்திரைப்படம் கொண்டுள்ள போதிலும் தமிழ்க்கலைஞர்கள் யாரும் இதில் உள்வாங்கப்படவில்லை எனவும், கதாபாத்திரங்களின் தோற்றமும் தமிழ் உச்சரிப்பும் இயல்பற்றதாக இருப்பதாகவும் குறிப்பிட்டு கனடியத் தமிழ்க் கலைஞர்களும், பொதுமக்களும் திரைப்படத்தை தயாரித்த தொலைக்காட்சி நிறுவனத்திற்கும், இயக்குனருக்கும் தமது கண்டனங்களைப் பதிவுசெய்து வருகின்றனர்.

இத்திரைப்படம் இந்த ஆண்டு கனடா நாட்டின் சார்பாக ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத் தக்கது.

View this post on Instagram

I want to say it one time with art : Dear ava @arraynow @deepamehtaofficial : Don’t Erase Us. Tag them, maybe they’ll see it. . . Obviously it’s too late to halt the release of the film since I’m sure production is done, but if you are putting together a film about an oppressed people in a conflicted country maybe have your casting reflect that. The arts run in our blood and there are so many Tamil creators on here, around the world, and there are SO many Queer Tamil folks whose lives could have changed if they were brought on board for this film. I’ll definitely be watching the film critically and take notes to make sure that me, as a Tamil creator, do everything I can to bring our stories to screens as small as phones and as large as my home. Toronto is home to at least 250,000 Tamils, which include actors, artists, cinematographers, film directors and more, so I’m still upset by your casting choices. I can’t wait to see my language be spoken incorrectly onscreen and cringe. November is a month of reflection and is a solemn month for some of us. I WILL bring authentic storytelling to the world, by speaking to folks whose stories I choose to talk about, illustrate, and photograph. We will not be erased. – Vinsia Maharajah. Edit : I am now selling this print in a limited 10-print run. If the price of an archival-quality fine art print (100CAD + shipping) is too much, 2021 will bring an affordable poster version of this image.

A post shared by vinsia maharajah (@vinsia) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here