13,000ஐ கடந்தது இலங்கையின் கொரோனா தொற்று!

இலங்கையின் கொரோனா தொற்று இன்று 13,000ஐ கடந்தது.

சீனாவின் வுஹானில் COVID-19 தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து, 13,000 க்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் வழக்குகளை உறுதிப்படுத்தும் 106 வது நாடாக இலங்கை இன்று மாறியது.

நாட்டில் இன்று 257 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இன்று அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் அனைவரும் மினுவாங்கொட- பேலியகொட கொத்தணியில் தொடர்புடையவர்கள்.

அதன்படி, மினுவாங்கொட- பேலியகொட கொரோனா கொத்தணி 9,749 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, மேலும் 537 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்து இன்று மருத்துவமனைகளில் இருந்து வெளியேறினர். குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 7,723 ஆக உயர்ந்தது.

தற்போது, ஒரு வெளிநாட்டவர் உட்பட 5,474 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 468 பேர் கொரோனா சந்தேகத்தில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here