சஹ்ரானின் மனைவிக்கும் கொரோனா!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரி சஹ்ரான் ஹசினின் மனைவி அப்துல் காதர் பாத்திமா ஹாதியா, கொரோனா தொற்று காரணமாக இன்று (07) பொலன்னருவ வெலிக்கந்த கொரோனா சிகிச்சை மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக மருத்துவமனை செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டிருந்த அப்துல் காதர் பாத்திமா ஹாதியா (25) சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் மற்றும் விசேட அதிரடிப்படையின் கடுமையான பாதுகாப்பின் கீழ் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அவருடன் வெலிக்கட சிறைச்சாலையில் இருந்த 28 கொரோனா நோயாளிகள் தற்போது வெலிக்கந்த சிகிச்சை மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here