க.பொ.த உயர்தர பரீட்சை இன்றுடன் நிறைவு!

2020 க.பொ.த உயர்தர பரீட்சைகள் இன்று நிறைவடைகிறது.

உலகப்பெருந் தொற்றான கொரோனா அபாயத்தின் மத்தியில் பரீட்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் சனத் புஜித தெரிவித்தார். நாடு முழுவதும் 2,648 மையங்களில் 362,824 பேர் பரீட்சைக்கு தோற்றினர்.

பரீட்சையை வெற்றிகரமாக நிறைவு செய்ய உதவிய அனைவருக்கும் பரீட்சைகள் ஆணையாளர் நன்றி தெரிவித்தார்.

ஒக்டோபர் 12 ஆம் திகதி தொடங்கிய உயர்தர பரீட்சை, 22 நாட்களின் பின்னர் இன்று நிறைவடைகிறது.

தகவல்தொடர்பு மற்றும் ஊடக கற்கை நெறியின் பகுதி இரண்டு பரீட்சை இன்று காலை நடைபெறும். உயர் கணிதம் பகுதி இரண்டு மற்றும் கிரேக்க மற்றும் ரோமானிய நாகரிகம் பகுதி இரண்டு பரீட்சை பிற்பகலில் நடைபெறும்.

இந்த வருட உயர்தர பரீட்சையை வெற்றிகரமாக நடத்துவதற்கு கல்வி, பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் போக்குவரத்து துறைகளில் உள்ள அனைவரும் பங்களிப்பு செய்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here