யாழ், கிளிநொச்சியில் நாளை சில வீதிகளின் புனரமைப்பு ஆரம்பம்!

ஒரு இலட்சம் கிலோ மீற்றர் வீதிகளை அபிவிருத்தி செய்யும் திட்டத்தில் வடக்கு மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட நான்கு வீதிகளை சீரமைக்கும் பணிகளை நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நாளை (6) ஆரம்பித்து வைக்கிறார்.

இதில், யாழ்ப்பாணத்தில் மூன்று வீதிகளும் கிளிநொச்சியில் ஒரு வீதியும் சீரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.

நாளை மாலை யாழ்ப்பாணத்தில் 3 வீதிகளின் புனரமைப்பு பணிகள் ஆரம்பித்து வைக்கப்படும்.

யாழ்ப்பாணம் – கடற்கரை வீதி (1.60 கிலோ மீற்றர் தூரம்) 488.4 மில்லியன் ரூபாய் செலவில் சீரமைக்கப்படவுள்ளது.

வல்லை- உடுப்பிட்டி – வல்வெட்டித்துறை வீதி (5.503 கிலோ மீற்றர் நீளம்) 507.50 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் சீரமைக்கப்படவுள்ளது.

அரியாலை நெடுங்குளம் பிள்ளையார் கோவில் வீதி (1.23 கிலோ மீற்றர் நீளம்) 54.443 மில்லியன் ரூபாய் செலவில் சீரமைக்கப்படவுள்ளது.

கிளிநொச்சி செல்வபுரம் – கிருஸ்ணபுரம் வீதி (2.05 கிலோ மீற்றர் நீளம்) 74.40 மில்லியன் ரூபாய் செலவிலும் சீரமைக்கப்படவுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here