வாக்கெண்ணும் நிலையங்களின் முன் ட்ரம்ப் ஆதரவாளர்கள் போராட்டம்!

அரிசோனாவின் பீனிக்ஸ் நகரில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். “நாங்கள் டிரம்பை நேசிக்கிறோம்”, “திருடுவதை நிறுத்துங்கள்” என்று அவர்கள் கோஷங்களை எழுப்பியபடியிருந்தனர்.

அரிசோனாவின் வேறும் பல பகுதிகளில் கொந்தளிப்பான நிலைமை காணப்படுகிறது.

மரிகோபா கவுண்டி தேர்தல் மையத்தில் வாகன நிறுத்துமிடத்தின் பெரும்பகுதியை எதிர்ப்பாளர்கள் நிரப்பினர். அங்கு ஷெரிப்பின் பிரதிநிதிகள் கட்டிடத்தின் வெளிப்புறம் மற்றும் உள்ளே எண்ணுதல் ஆகிய இரண்டையும் பாதுகாத்து வந்தனர்.

அரிசோனா மாநிலம் ஜனாதிபதி ட்ரம்ப் அங்கம் வகிக்கும் குடியிரசு கட்சியின் கோட்டை. எனினும், இம்முறை அங்கு ஜோ பிடன் வெற்றிபெற்றுள்ளதாக உத்தியோகப்பற்றற்ற முறையில் அசோசியேட்டட் பிரஸ் அறிவித்துள்ளது.

அதேவேளை, போராட்டத்தை கடத்த முயன்ற 20 க்கும் மேற்பட்டவர்களை நியூயோர்க் பொலிசார் கைது செய்துள்ளனர். குப்பைகள், முட்டைகளை எறிந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பட்டாசுகளையும் வெடிக்க வைத்தனர்.

முன்னதாக நூற்றுக்கணக்கானவர்கள் அமெரிக்கக் கொடிகளை அசைத்து, “ஒவ்வொரு வாக்குகளையும் எண்ணுங்கள்” என்று எழுதப்பட்ட பதாதைகளை கொண்டு வாஷிங்டன் ஸ்கொயர் பூங்காவில் மிட் டவுன் மன்ஹாட்டன் வழியாக அணிவகுத்துச் சென்று இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here