நுவரெலியாவில் 1,407 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன!

நுவரெலியா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு முயற்சிகள் வெற்றிகரமாக நடைபெற்று வருவதாக மாவட்ட செயலாளர் எம்.பி.ரோஹண புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.

தற்போது 1,407 குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

பேலியகொட மீன் சந்தையுடன் இணைக்கப்பட்ட தொற்றாளர்கள் 34 பேர் மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களின் முதல் மற்றும் இரண்டாம் அடுக்கு தொடர்புகள் மாவட்டம் முழுவதும் அடையாளம் காணப்பட்டு  1,407 குடும்பங்கள் தங்களது குடியிருப்புகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தனிமைப்படுத்தப்பட்டவர்களிற்கான 10,000 ரூபா நிவாரணப்பொதி வழங்கும் செயற்திட்டம் ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here