கொரோனாவே ஓடு: மஹிந்தவின் ஐடியாவில் கிளிநொச்சியில் யாகம்!

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து விடுபடுவதற்கு கிளிநொச்சியில் விசேட யாகம்
ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது

பிரதமர் மகிந்த ராஜபக்சவினால் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து விடுப்படுவதற்கு இந்து ஆலயங்களில் விசேட பிரார்த்தனைகளை மேற்கொள்ளுமாறு பணிக்கப்பட்ட நிலையில் குறித்த விசேட யாகம் இன்று கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டது.

காலை 10 மணியளவில் கிளிநொச்சி பசுமை பூங்கா அருகில் உள்ள மீனாட்சி அம்மன்
ஆலயத்தில் இடம்பெற்றது.

இவ் யாக பூசையில் கிளிநொச்சி மாவட்ட செயலகமும், வன்னி பிராந்திய
சைவகுருமார் ஒன்றியமும், கிளிநொச்சி ஊடக அமையமும் இணைந்து விசேட யாக பூசை வழிபாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here