கொரோனாவால் பாதிக்கப்பட்ட கொழும்பு வர்த்தகரின் உறவினர்களின் கடைகள் மீள திறப்பு!

யாழ் நவீன சந்தைக் கட்டடத் தொகுதியில் கொரோனா தொற்றால் மூடப்பட்டிருந்த கடைகள் இன்றைய தினம் திறக்கப்பட்டது.

கொழும்பிலிருந்து வந்து கொரோனா தொற்றுக்கு உள்ளானவரின் உறவினர்களின் நான்கு கடைகள் யாழ்ப்பாண சுகாதார வைத்திய அதிகாரியினால் மூடப்பட்டிருந்தன. கடை உரிமையாளர்களுக்கு முதலாவது PCR பரிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை என்பதன் அடிப்படையில் இன்றைய தினம் குறித்த கடைகளை திறப்பதற்கு சுகாதாரப் பகுதியினரால் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது

அதன் அடிப்படையில் இன்று காலை குறித்த கடைகள் அனைத்தும் கிருமி தொற்று நீக்கம் செய்யப்பட்டு திறந்துவைக்கப்பட்டது.

யாழ் மாநகர முதல்வர், யாழ்ப்பாணம் சுகாதார வைத்திய அதிகாரி, யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, யாழ் வணிகர் கழக தலைவர் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் மூடப்பட்டிருந்த கடைகள் அனைத்தும் கிருமி தொற்று நீக்கம் செய்யப்பட்ட பின்னர் திறக்கப்பட்டது.

கடைகளில் பணியாற்றுபவர்களுக்கு விழிப்புணர்வு செயற்பாடும் முன்னெடுக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here