யுவதியின் கழுத்தில் கத்தி வைத்து பாலியல் வல்லுறவு!

21 வயதான யுவதியொருவரை கத்தியை காட்டி மிரட்டி பாலியல் வல்லுறவிற்குள்ளாக்கிய 24 வயதான இளைஞனை சிலாபம் பொலிசார் கைது செய்துள்ளனர்.

சிலாபம், புளியங்கடவரவில் உள்ள முகுனுவதவன பகுதியில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாளராக பணியாற்றி வரும் 21 வயதான யுவதியே வல்லுறவிற்குள்ளாகியுள்ளார்.

அந்த நிறுவனத்தின் களஞ்சிய அறையிலேயே யுவதி தங்கியிருந்துள்ளார். அந்த நிறுவனத்தில் பணிபுரியும் லொறி சாரதியே யுவதியை துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

அவர் தங்கியிருந்த களஞ்சிய அறையிலேயே சம்பவம் நடந்தது. யுவதியின் கழுத்தில் கத்தியை வைத்து, மிரட்டி வல்லுறவிற்குள்ளாக்கியுள்ளார்.

சிலாபம் நீதிமன்றத்தில் சந்தேகநபர் முற்படுத்தப்பட்டு, விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here