பாணந்துறையில் திடீரென கரையொதுங்கிய 100 திமிங்கிலங்கள்!

பாணந்துறை கடற்கரையில் நேற்று சுமார் 100 திமிங்கலங்கள் கரையொதுங்கிய பரபரப்பு சம்பவம் நடந்தது.

திடிரென கரையொதுங்கிய ஏராளம் திமிங்கிலங்களை கண்ட பிரதேசவாசிகள் அவற்றை மீண்டும் கடலிற்குள் விட முயற்சித்தனர். எனினும், முயற்சி வெற்றியளிக்காததை தொடர்ந்து, கடற்படையினருக்கு விடயம் அறிவிக்கப்பட்டது.

கடற்படையினர், பொலிசார் இணைந்து திமிங்கிலங்களை மீண்டும் கடலில் விட்டனர்.

திமிங்கிலங்கள் கட்டி இழுத்து சென்று ஆழ்கடலில் விடப்பட்டன. துரிதகதியில் செயற்பட்டதால் திமிங்கிலங்கள் எவையும் உயிரிழக்கவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here