மினுவாங்கொடயிலிருந்து வந்து யாழில் ஒரு மாதமாக நடமாடும் வியாபாரத்தில் ஈடுபட்ட இருவர்!

இலங்கையில் கொரொனா இரண்டாம் அலை அடையாளம் காணப்பட்ட மினுவாங்கொட பகுதியிலிருந்து வந்து, யாழ்ப்பாணத்தின் பல பாகங்களிலும் நடமாடும் வியாபாரத்தில் ஈடுபட்ட இருவர் வடமராட்சியில் அடையாளம் காணப்பட்டனர்.

வடமராட்சி, மாலைசந்தை பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் இன்று மாலை முச்சக்கர வண்டியில் வந்து வியாபாரத்தில் ஈடுபட்ட இருவர் பிரதேசவாசிகளால் விசாரிக்கப்பட்டதில், அவர்கள் மினுவாங்கொட பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.

இதையடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

விடயமறிந்து கரவெட்டி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி, பொலிசார், இராணுவத்தினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளில் ஈடுபட்டனர்.

கடந்த ஒரு மாதத்தின் முன்னர் மினுவாங்கொடயிலிருந்து யாழ்ப்பாணம் வந்து நடமாடும் வியாபாரத்தில் ஈடுபடுவதாக அவர்கள் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் ஐந்து சந்தி பகுதியில் வாடகை அறையொன்றில் தங்கியுள்ளனர்.

இதுவரை யாழ்ப்பாணத்தில் எந்த பதிவும் அவர்கள் மேற்கொண்டிருக்கவில்லையென்பதும் தெரிய வந்தது.

அவர்கள் பற்றிய முழுமையான விபரமும் பெறப்பட்ட பின்னர், தங்கியிருக்கும் பகுதியில் பதிவு மேற்கொள்ளும்படி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here