உயிரிழந்த தாய் யானை; குட்டியின் பாசப் போராட்டம்!

மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தின் முறுத்தானையில் காட்டு யானையொன்று உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த பிரதேசத்தில் காட்டு யானையொன்று நோய்வாய்பட்டு உடல் மெலிந்த நிலையில் தனது குட்டியுடன் நேற்று வந்திருந்ததாகவும் பின்னர் நடக்க முடியாமல் வீழ்ந்து கிடந்ததாக பிரதேச வாசிகள் தெரிவித்தனர்.

இதனையடுத்து கிரான் வனஜீவராசிகள் திணைக்கத்திற்கு தகவல் வழங்கியமையினையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்து சிகிச்சை வழங்கியபோதும் சிகிச்சை பலனின்றி தாய் யானை உயிரிழந்துள்ளதாக தெரிவித்தனர்.

இதேவேளை குட்டி யானையானது இறந்த தனது தாயின் அருகில் எவரும் நெருங்க விடாது குழப்ப நிலையினை எற்படுத்தியதாக சம்பவத்தினை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

வனஜீவராசிகள் அதிகாரிகள் சடலத்தினை அடக்கம் செய்யும் சட்டபூர்வ நடவடிக்கையினை மேற்கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here