அரசு எரிப்பது சடலங்களையல்ல; உலக முஸ்லீம்களின் உள்ளங்களை: மன்னாரில் எதிர்ப்பு!

கைது செய்யப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஸாட் பதியுதீனை விடுதலை செய்யக் கோரியும், கொரோனா காரணமாக இறந்து போகும் முஸ்லீம்களின் ஜனாசா (சடலம்) எரிப்பதை நிறுத்த கோரியும் இன்றைய தினம் திங்கட்கிழமை (2) காலை மன்னார் பஸார் பகுதியல் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மன்னாரில் உள்ள முஸ்லீம் இளைஞர்கள் சிலரால் மன்னார் சுற்று வட்டப் பகுதியில் அடையாள கவனயீர்ப்பு போராட்டமாக முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது கொரோனா தொற்று காரணமாக இறந்து போகும் முஸ்லீம்களின் ஜனாஸாக்களை (சடலம்) எரிப்பதை நிறுத்த வேண்டும், சிறுபான்மை இனத்தின் தலைவராக இருக்கும் முன்னாள் அமைச்சர் ரிஸாட் பதியுதீனை விடுதலை செய்யக் கோரியும் குறித்த கவனயீர்பு போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் கோரிக்கை முன்வைத்தனர்

இதன் போது முஸ்லீம் பராளுமன்ற ஜனாஸாக்களே உங்களுக்கு முதுகெலும்பு இருக்கின்றதா?, நீங்கள் மௌனிகளாக இருப்பதற்கு இறக்கலாம், நீங்கள் எரிப்பது உடலை அல்ல உலக முஸ்லீம்களின் உள்ளத்தை, சிறுபான்மை தலைவரான ரிஸாட் பதியுதீனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும் சிறந்த நிர்வாக திறன் கொண்ட ஜனாதிபதி சிறுபான்மை மக்களின் உரிமைகளை பெற்றுத் தரவேண்டும் போன்ற பல்வேறு பதாதகளை ஏந்தியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடதக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here