சிறுவர்களிற்கான பொம்மை தயாரிக்கும் தொழிற்சாலையின் 49 ஊழியர்களிற்கு கொரோனா!

வத்தள சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட ஹெந்தல, கெரவலப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள சிறுவர் பொம்மை தொழிற்சாலையில் பணியாற்றும் 49 ஊழியர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இங்கு தயாரிக்கப்படும் விளையாட்டு பொம்மைகள் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த தொழிற்சாலை ஒரு ஜெர்மன் இணை நிறுவனமாகும்.

பாதிக்கப்பட்டவர்களில் 45 பேர் பெண்கள். நான்கு பேர் ஆண்கள்.

இங்கு 1000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here