கனடா கத்திக்குத்தில் 2 பேர் பலி!

கனடா நாட்டின் கியூபெக் நகரில் சாட்டியூ பிரன்டெனாக் பகுதியருகே விடுமுறை நாளான இன்று இனம்தெரியாத இளைஞன் ஒருவர் அங்கிருந்த மக்கள் மீது கத்தி குத்து தாக்கியுள்ளார்.

இந்த தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். இதுதவிர 5 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். இந்த சம்பவத்திற்கு பின் அந்த நபர் தப்பியோடி விட்டார்.

அந்நாட்டு நேரப்படி அதிகாலை 1 மணியளவில் நடந்த தாக்குதல் பற்றிய தகவல் அறிந்து பொலிசார் சம்பவ பகுதிக்கு சென்று விசாரணையில் ஈடுபட்டனர். பின்னர், தாக்குதலில் ஈடுபட்ட இளைஞனை ஓல்ட் போர்ட் பகுதியருகே கைது செய்தனர்.

25 வயது மதிக்கத்தக்க அந்த இளைஞனை பொலிசார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இந்த சம்பவத்திற்கு பின் குடிமக்கள் வீட்டிலேயே இருக்கும்படியும், கதவுகளை நன்கு பூட்டி கொள்ளும்படியும் பொலிசார் அறிவுறுத்தி உள்ளனர். தொடர்ந்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here