மடு கல்வி வலயத்திற்கு புது பேருந்து!

மடு கல்வி வலயத்திற்கு வடக்கு மாகாண சபையினால் பேருந்து ஒன்று அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.

மடு கல்வி வலயத்தில் உள்ள பாடசாலை மாணவர்களின் நலன் கருதி மடு வலயக்கல்வி பணிமனையின் கோரிக்கைக்கு அமைவாக வடமாகாண சபையின் பிரதம செயலாளர் அவர்களினால் வடக்கு மாகாண சபையில் பாவனையில் இருந்த பேருந்து ஒன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த பேருந்து மடு வலயக்கல்வி பணிப்பாளர் எஸ்.சத்தியபாலன் அவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here