இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 75 மூட்டை மஞ்சள் மீட்பு!

தனுஸ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற 2 ஆயிரம் கிலோ மஞ்சள் கட்டி அடங்கிய 75 மூடைகளை நடுக்கடலில் வைத்து படகுடன் க்யூ பிரிவு பொலிஸார் பறிமுதல் செய்தனர்.

மண்டபம் வடக்கு கடல் வழியாக வெளி மாவட்ட படகு ஒன்றில் இலங்கைக்கு கடத்தல் பொருட்கள் அனுப்பப்பட உள்ளதாக க்யூ பிரிவு போலீசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மண்டபம் வடக்கு கடற்கரையில் நேற்று சனிக்கிழமை நள்ளிரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது மண்டபம் வடக்கு மீன் பிடி துறைமுகம் அருகே கரையில் உரிய பதிவு எண் இல்லாத நாட்டு படகு ஒன்று நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்தது.

இதனை கண்ட கியூ பிரிவு போலீசார் படகில் ஏறி சோதனை செய்தனர்.

அப்போது படகில் இலங்கைக்கு கடத்துவதற்காக மூட்டை மூட்டையாக மஞ்சள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்ததையடுத்தது க்யூ பிரிவு போலீசார் மேற்கொண்ட விசாரணையில் நாட்டுபடகு தங்கச்சிமடத்தை சேர்ந்தது என முதல் கட்ட விசாரனையில் தெரியவந்துள்ளது.

இந்தப் நாட்டு படகு தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து தனுஸ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு சமையல் மஞ்சள் கடத்தி செல்வதற்காக மண்டபம் வந்ததாகவும் இலங்கையில் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் அதிகரித்தது வருவதால் வார இறுதி நாட்களில் இலங்கை மீனவர்களை மீன் பிடிக்க கடலுக்குள் அனுமதிக்கவில்லை.

இதனால் மீனவர்கள் போர்வையில் கடத்தல்காரர்கள் இலங்கை பகுதிக்கு செல்ல முடியாததால் சமையல் மஞ்சளை கடத்தி வந்த கடத்தல்காரர்கள் பாம்பனில் நாட்டுபடகை விட்டு விட்டு சென்றுள்ளனர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய கடத்தல்காரர்களை தீவிரமாக தேடி வருவதாகவும் விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என க்யூ பிரிவு போலீசார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த ராமேஸ்வரம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தீபக் சுவீஸ்ச் மண்டபம் வடக்கு கடற்கரையில் கைப்பற்றப்பட்ட சமையல் மஞ்சளை பார்வையிட்டதுடன் அப்பகுதி மீனவர்களிடம் விசாரனை நடத்தி வருகிறார்.

மேலும் கைப்பற்றப்பட்ட மஞ்சளின் இலங்கை மதிப்பு 65 லட்சம் என க்யூ பிரிவு போலீசார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here