வெடித்து சிதறின விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள்!

வவுனியா பொன்னாவரசங்குளம், ஈச்சங்குளப்பகுதியில் இருந்து விடுதலைப்புலிகளின் துப்பாக்கி மற்றும் கைக்குண்டுகளை பொலிசார் இன்று மீட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் ஆயுதங்கள் இருப்பதாக தேசிய புலனாய்வுபிரிவிற்கு கிடைத்த தகவலிற்கமைய நீதிமன்ற அனுமதியுடன் அப்பகுதிக்கு சென்ற வவுனியா பொலிசார் மண் அகழப்பயன்படும் இயந்திரம் மூலம் நிலத்தை தோண்டி தேடுதலில் ஈடுபட்டனர்.

இதன்போது மண்ணில் புதையுண்ட நிலையில் காணப்பட்ட ரி56 ரக துப்பாக்கி மற்றும் அதற்கு பயன்படும் இரண்டு மகசின்கள், விடுதலைப்புலிகளினால் தயாரிக்கப்பட்ட இரண்டு கைக்குண்டுகள் உட்பட 6 கைக்குண்டுகள், பொலிசாரினால் மீட்டகப்பட்டது.

இதன் பின்னர் மீட்கப்பட்ட கைக்குண்டுளை மடுக்கந்தை விசேட அதிரடிபடையினரால் செயலிழக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here