மேலுமொரு நாடாளுமன்ற செய்தியாளருக்கு கொரோனா!

நாடாளுமன்றத்தில் செய்தி சேகரிக்க சென்ற இரண்டாவது செய்தியாளரும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த வாரம் நடைபெற்ற 20 வது திருத்த விவாதத்தில் செய்தி சேகரித்த நிலையில் கொரோனா தொற்றுடன் 2 வது நாடாளுமன்ற செய்தியாளர் இவராவார்.

சிங்கள மொழி நாளிதழின் செய்தியாளர் ஒருவரே தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சண்டே டைம்ஸ் செய்தித்தாளின் நாடாளுமன்ற நிருபர் 2 நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார்.

சண்டே டைம்ஸ் செய்தியாளர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட பின்னர் ஒக்டோபர் 21 மற்றும் 22 திகதிகளில் நாடாளுமன்றத்தில் இருந்த அனைத்து செய்தியாளர்களையும் சுயதனிமைப்படுத்துமாறு அதிகாரிகள் குறிப்பிட்டிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here