கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இலங்கையில் மேலும் 102 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்மூலம் நாட்டின் மொத்த தொற்றாளர்கள் எண்ணிக்கை 10,663 ஆக உயர்ந்துள்ளது.

அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகிய 81 பேர், தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்து 21 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

இதன்மூலம் மினுவாங்கொட-பேலியகொட கொத்தணியில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7,185 ஆக உயர்ந்துள்ளது.

ஏழு வெளிநாட்டவர்கள் உட்பட 6,244 பேர் தற்போது நாடு முழுவதும் 40 வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இரண்டு வெளிநாட்டினர் உட்பட 117 நபர்கள் குணமடைந்து இன்று வீடு திரும்பினர். இதன்மூலம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4,399 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று சந்தேகத்தில் 399 பேர் கண்காணிப்பில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here