நேற்று 633 பேருக்கு தொற்று!

நேற்று (30) நாட்டில் 633 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து, நாட்டில் பதிவான கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 10,424 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 595 பேர், பேலியகோடா மீன் சந்தை மற்றும் மீன்பிடி துறைமுகங்களுடன் தொடர்புடையவர்கள். 38  பேர், தனிமைப்படுத்தல் மையங்களை சேர்ந்தவர்கள்.

மினுவாங்கொட-பேலியகொட கொரோனா கொத்தணியில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,946 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது, 6,123 பேர் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கடந்த 24 மணித்தியாலத்தில் 140 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,282 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்று சந்தேகத்தில் 444 நபர்கள் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here