உயிர்த்த ஞாயிறு ஆணைக்குழு விசாரணை பிரிவு பொலிஸ் அதிகாரிக்கும் கொரோனா!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை விசாரிக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின், பொலிஸ் புலனாய்வு பிரிவில் கடமையாற்றிய ஒருவர் நேற்று கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார். அவர் கொழும்பு குற்றப்பிரிவு (சி.சி.டி) உடன் இணைக்கப்பட்ட அதிகாரி.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் புலனாய்வு அதிகாரியான இன்னொருவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது பி.சி.ஆர் அறிக்கை எதிர்பார்க்கப்படுகிறது.

தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர் சிகிச்சைக்காக அனுராதபுரம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதேவேளை, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை ஆணைக்குழு இயங்கும் இடத்திற்கு அருகிலேயே இயங்கும், அரசியல் பழிவாங்கல்களை ஆராயும் ஆணைக்குழு, முன்னெச்சரிக்கையாக தனது நடவடிக்கைகளை நிறுத்தி வைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here