யாழ் போதனா வைத்தியசாலை பரிசோதனையில் கண்டறியப்பட்ட 10 கொரோனா தொற்றாளர்கள்!

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனையில் வவுனியா தனிமைப்படுத்தல் மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

வடக்கின் பல்வேறு பகுதிகளிலுள்ள தனிமைப்படுத்தல் மையங்கள், சிகிச்சை மையங்கள், சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளை சேர்ந்த 293 பேரிடம் பெறப்பட்ட உயிரியல் மாதிரிகள் நேற்று (19) யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் பரிசோதிக்கப்பட்டது.

இதன்போதே 10 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். இவர்கள் அனைவரும் வவுனியா தனிமைப்படுத்தல் மையத்திலுள்ள விமானப்படையினர் ஆவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here