சட்டவிரோதமாக கொண்டு சென்ற மதுபான போத்தல்கள் சவளக்கடை பொலிசாரிடம் சிக்கின!

அம்பாறை மாவட்டம் சவளக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மதுபானபோத்தல்கள் மோட்டார் சைக்கிள் ஒன்றின் ஊடாக கொண்டு சென்று விற்பனை செய்யப்படுவதாக சவளக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர். ரம்ஷீன் பக்கீருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றினை தொடர்ந்து வியாழக்கிழமை (29) வீதி ரோந்து நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதன் போது பல்சர் ரக மோட்டார் சைக்கிளில் சுமார் 35 மற்றும் 18 வயது மதிக்கத்தக்க இரு சந்தேக நபர்கள் 58 மதுபான போத்தல்களை சூட்சுமமாக மறைத்து எடுத்து செல்ல முற்பட்டுள்ளனர். சம்பவ இடத்தில் கடமையில் ஈடுபட்ட பொலிஸ் குழுவினர் 2 சந்தேக நபர்களை கைது செய்ததுடன் மோட்டார் சைக்கிள் மற்றும் சுமார் 58 மதுபான போத்தல்களை மீட்டுள்ளனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட மதுபான போத்தல்கள் சுமார் பல இலட்சம் பெறுமதியானவை எனவும் அளவிற்கு அதிமான மதுபான போத்ததல்களை சட்டவிரோதமாக பதுக்கி கொண்டு சென்ற குற்றச்சாட்டில் மேற்படி சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

மேலும் கைதான இரு சந்தேக நபர்கள் தொடர்பில் விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் கல்முனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

-பா.டிலான்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here