சசிகலாவிற்காக உருவானது தற்கொலை படை!

சசிகலாவுக்காக தற்கொலை படையாகவும் மாற தயார் என்று போலீஸ்காரர் ஒருவர் போஸ்டர் அடித்து ஒட்டி பரபரப்பை கிளப்பி உள்ளார்.

இன்னும் சில தினங்களில் சசிகலா விடுதலை ஆகி வர வாய்ப்புள்ளதாக வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் தெரிவித்திருந்தார். இந்நிலையில், அவரது வருகை அமமுக, அதிமுகவினரிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

வெளியே வந்த பிறகு சசிகலா என்ன முடிவெடுப்பார் என்ற ஆவல் தமிழக மக்களிடம் பரவலாக உள்ளது. இந்நிலையில்தான், சசிகலாவுக்கு ஆதரவாக ஒரு ஓய்வு பெற்ற போலீஸ்கார் போஸ்டர் அடித்துள்ளார். அவர் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செக்காணூரணியை சேர்ந்த ஒச்சாத்தேவர் என்பவர்தான் சசிக்கலாவிற்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டியுள்ளார்.

அந்த போஸ்டரில், “பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு 17 கிலோ தங்கம் தந்து அழகு பார்த்த, சோழநாட்டுபேரரசி சின்னம்மா சசிகலா அவர்களே, 2021ம் ஆண்டில் தஞ்சை அரண்மனை மன்னர் பேரரசியாக பொறுப்பேற்று தமிழினம் காக்க தமிழ்நாட்டு மக்களை காக்க ஆணையிடு! ஒற்றர் படை, போர் படை, தற்கொலை படை தயார் நிலையில் உள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

போஸ்டருக்கு கீழே, “காவல்துறை தன்மான போராளி மா. ஒச்சாத்தேவர், பி.பில்பாண்டி, தளபதி, அரசு போக்குவரத்து கழகம்” என்று குறிப்பிட்டு 2 பேரின் போட்டாக்களும் ஒட்டப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here