குழந்தை பிரசவித்த தாய்க்கு கொரோனா!

இரத்னபுரி போதனா வைத்தியசாலையில் குழந்தை பிரசவித்த இளம் தாய் ஒருவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று (29) கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு துறைமுக பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள பொலிஸ் விசேட அதிரடிப்படையில் பணியாற்றும் அவரது கணவர் கடந்த வாரம் இரத்னபுரி, பட்டுகெதரவில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுள்ளதும் தெரிய வந்துள்ளது.

தாய் நேற்று முன்தினம் (28) சிசேரியன் மூலம் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார். அவர் சுகவீனமடைந்ததை தொடர்ந்து நடத்தப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவர் தொற்றிற்குள்ளாகியிருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து, பிரசவத்தின்போது பணியாற்றிய மருத்துவர்கள் மற்றும் கதிர்வீச்சு பிரிவின் பணியாளர்கள் உட்பட வைத்தியசாலை பணியாளர்கள் குழு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இரத்னபுரி பொது சுகாதார பரிசோதகர்கள் நேற்று பிற்பகல் வைத்தியசாலை ஊழியர்கள் பலரையும், பெண்ணின் குடும்பத்தினரையும் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்தனர்.

பிறந்த குழந்தை நல்ல உடல்நலத்துடன் உள்ளது.

அந்த பெண்ணின் கணவரான விசேட அதிரடிப்படை அதிகாரி, இரத்னபுரியில் உள்ள இரண்டு கடைகளுக்குச் சென்றிருந்தா. கடையில் பணியாற்றுபவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here