இலங்கையின் பிரதான பிசிஆர் இயந்திரம் பழுது: சீன தயாரிப்பாம்!

ஆசிய அபிவிருத்தி வங்கியின் பங்களிப்புடன், சீனாவிலிருந்து கொண்டுவரப்பட்ட 250 மில்லியன் ரூபாய் பெறுமதியான, பிசிஆர் பரிசோதனை இயந்திரம் மே மாதம் முல்லேரியா வைத்தியசாலையில் பொருத்தப்பட்ட நிலையில், கடந்த 6 நாள்களாக இது செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிசிஆர் பரிசோதனை இயந்திரம் செயழிலந்துள்ளதால், பிசிஆர் பரிசோதனை முடிவுகளைப் பெற்றுக்கொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இலங்கையிலுள்ள பிரதான பிசிஆர் பரிசோதனை இயந்திரம் இதுவாகும். ஒருநாளைக்கு 1200 மாதிரிகள் சோதனைக்குள்ளாக்கலாம்.

பிசிஆர் அறிக்கைகளைப் பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக, ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்தல் உள்ளிட்ட தொற்றைக் கட்டுப்படுத்தும் முறைகளை செயற்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதனால், சுமார் 20ஆயிரம் பிசிஆர் பரிசோதனைகள் தாமதமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here