ஒரே நாளில் பட்ஜெட்!

நவம்பர் 12ஆம் திகதி 2020ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தாக்கல் செய்வதென்றும், அன்றைய தினமே வாக்கெடுப்பிற்கு விடுதென்றும் நேற்று கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

2020, 2021 ஆகிய ஆகிய இரண்டிற்கான ஒதுக்கீட்டு வரைபுகள் ஒக்டோபர் 20 ஆம் திகதி முதல் வாசிப்புக்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.

2020ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் நவம்பர் 12 ஆம் திகதி காலை 10 மணி முதல் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு அன்றைய தினமே வாக்களிப்பு நடைபெறும். விவாதத்திற்கான அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும்.

நவம்பர் 17 ஆம் திகதி 2021 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை அரசாங்கம் முன்வைக்கும்.

அதேவேளை, எதிர்வரும் 3ஆம் திகதி மாத்திரம் நாடாளுமன்ற அமர்வு இடம்பெறும். 4,5,6ஆம் திகதிகளில்அமர்வுகள் இடம்பெறாது.

கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்ப அபேவர்தன தலைமை தாங்கினார். சபைத் தலைவர் தினேஷ் குணவர்தன, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, லக்ஷ்மன் கிரியெல்ல, அமைச்சர்கள் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், டலஸ் அலகபெரும, மஹிந்த அமரவீர, வாசுதேவ நானாயக்கர, பிரசன்ன ரணதுங்க, அலி சப்ரி மற்றும் எம்.பி.க்கள் மஹிந்த சமரசிங்க, ரவூப் ஹக்கீம், திலன் பெரேர ஆகியோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here