மீண்டும் வீட்டிலிருந்தே வேலை!

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக வீட்டில் இருந்தே வேலை செய்யும் முறையை மீண்டும் செயற்படுத்துமாறு மேல் மாகாண மற்றும் ஏனைய பிரதான நகரங்களின் அரச நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

2020 ஏப்ரல் மாதத்தில் இருந்து மே மாதம் வரையில் செயற்படுத்தப்பட்ட ´வீட்டில் இருந்தே வேலை செய்யும் காலத்தினுள் கிடைத்த அனுபவங்களை பயன்படுத்தி அத்தியாவசிய மற்றும் வேறு சேவைகளை பெற்றுக் கொடுப்பதற்கு மாற்று திட்டங்களை வகுக்குமாறு நிறுவனங்களின் தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனுடன் தொடர்புடைய சுற்றறிக்கை ஜனாதிபதி செயலாளர் பி.பீ.ஜயசுந்தவினால் இன்று (29) அனைத்து அமைச்சுக்கள் மற்றும் இராஜாங்க அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண பிரதான செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள்,திணைக்களங்களின் தலைவர்கள் மற்றும் அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் பொது மேலாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விசேடமாக இந்த வைரஸ் பரவல் காரணமாக பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களுக்கு இந்த சுற்றறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here