அடுத்தடுத்து பிரான்ஸ் சந்தித்த பயங்கரவாத தாக்குதல்கள்… 3 பேரை கொன்ற தீவிரவாதி!

பிரான்ஸின் தெற்கு பகுதியிலுள்ள நைஸ் நகர தேவாலயத்திற்குள் நடந்த தாக்குதலில், மூன்று பேர் கொல்லப்பட்டனர். இதில் இரண்டு பேர் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டனர்.

இதேவேளை, பிரான்ஸில் மேலுமொரு பயங்கரவாத தாக்குதல் முறியடிக்கப்பட்டு, ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இரண்டு சம்பவங்களும், இரண்டு மணி நேர இடைவெளிக்குள் நடந்தன.

முதல் தாக்குதல் காலை 9 மணியளவில் நைஸில் உள்ள நோட்ரே டேம் பசிலிக்காவில் தொடங்கியது. துனிசிய குடியேற்றவாசியான பிரஹிம் அவுசௌயி (21) என்று நம்பப்படும் நபர் – ஒரு வயதான பெண் தேவாலயபாரிஷனரையும் ஒரு ஆண் தேவாலய காவலரையும் தலை துண்டித்து கொன்றார். பின்னர் அவர்  பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இரண்டு மணி நேரம் கழித்து, ஒரு ஆயுதமேந்திய நபர் நைஸிலிருந்து 120 மைல் தொலைவில் உள்ள அவிக்னான் வீதிகளில் மக்களை மிரட்டினார் – காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்படுவதற்கு முன்பு ‘அல்லாஹு அக்பர்’ என்று கத்தினார்.

அத்துடன், சவூதி அரேபியாவின் ஜெட்டாவில் உள்ள பிரெஞ்சு துணைத் தூதரகத்திற்கு வெளியே ஒரு பாதுகாப்புக் காவலரும் குத்தப்பட்டு காயமடைந்தார். சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

நபிகள் நாயகத்தை நிர்வாணமாக- கேலியாக வரையப்பட்ட கார்ட்டூன்களிற்கு ஆதரவான நிலைப்பாட்டை பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் எடுத்ததை தொடர்ந்து, இஸ்லாமிய உலகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டதோடு, சுன்னி முஸ்லிம்கள் நபியின் பிறந்த நாளைக் குறிக்கும் நாளில் இந்த தாக்குதல்கள் நடந்துள்ளன.

இரண்டு வாரங்களுக்கு முன்னர், பாரிஸுக்கு வடக்கே ஒரு பள்ளி ஆசிரியரான சாமுவேல் பாட்டி தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.

தாக்குதலைத் தொடர்ந்து நைஸுக்குப் பயணம் செய்த மக்ரோன், ஒரு உரையை நிகழ்த்தினார். இறந்தவரை கௌரவிப்பதற்காக பிரான்ஸ் முழுவதும் தேவாலய மணிகள் ஒலித்தன.

இதன் தொடர்ச்சியாக இன்று பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. நோட்ரே டேம் பசிலிக்கா தேவாலயத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் முதலில் இருவர் கழுத்து வெட்டப்பட்டு கொல்லப்பட்ட பின்னர்,  மூன்றாவதாக, ஆபிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த 30 வயதுடைய பெண்ணை பல முறை கத்தியால் குத்தினார். தப்பியோட முன்ற அவர் அங்கு உயிரிழந்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் துப்பாக்கிச்சூடு நடத்தி, தாக்குதல் நடத்தியவரை கைது செய்தனர்.

தாக்குதல் நடத்தியவர் மத்தியதரைக் கடல் வழியாக கடத்தப்பட்டு, இத்தாலி வழியாக பிரான்ஸ் வந்தவர்.

இந்த தாக்கதல் நடந்த இரண்டு மனித்தியாலத்தில், காலை 11.15 மணியளவில் மோன்ட்பேவட்டில் துப்பாக்கியுடன் ஒருவர் மக்களை அச்சுறுத்தத் தொடங்கினார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார், ஆயுதத்தை கைவிட மறுத்த அந்த நபரை எச்சரித்தபோதும் அவர் கேட்கவில்லை. இதையடுத்து அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதற்கிடையில், சவுதி அரேபியாவில், பிரெஞ்சு தூதரகத்தில் ஒரு காவலரை ‘கூர்மையான கருவி’ மூலம் குத்திய ஒருவர் கைது செய்யப்பட்டார். உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் காவலர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தாக்குதல் நடத்தியவர் கைது செய்யப்பட்டார்.

ரியாத்தில் உள்ள பிரான்சின் தூதரகம் ‘இராஜதந்திர வளாகத்தின் மீதான தாக்குதலை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது’ என்று கண்டனம் செய்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here