மெக்சிக்கோவில் மனிதப்புதைகுழி அடையாளம் காணப்பட்டது!

மத்திய மெக்ஸிகோவின் பொது மயானமொன்றில் பெண்கள் மற்றும் இளைஞர்கள் உட்பட 59 பேரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

குவானாஜுவாடோ மாகாணத்தின் சால்வதியெரா நகரத்தில் இந்த மனிதப் புதைகுழிகள் அடையாளம் காணப்பட்டன. போதைப்பொருள் கடத்தல் கும்பல்களிற்கிடையிலான மோதலின் விளைவாக இவர்கள் கொல்லப்பட்டிருக்கலாமென கருதப்படுகிறது.

குவானாஜுவாடோவில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய மனிதப் புதைகுழி இதுவாகும்.

மீட்கப்பட்ட உடல்களில் 10 பெண்களின் சடலங்கள் உள்ளன. பெரும்பாலானவை இளைஞர்களின் சடலங்கள்.

அங்குள்ள பொது மயானத்தில் காணாமல் போனவர்களின் சடலங்கள் புதைக்கப்பட்டுள்ளதாக இரண்டு வாரங்களின் முன்னர் கிடைத்த இரகசிய தகவலையடுத்து, அதிகாரிகள் கடந்த ஒரு வாரமாக அந்த பகுதியில் நடத்திய தேடுதலில் 59 குழிகளில் இருந்து சடலங்கள் மீட்கப்பட்டன.

80 இற்கும் மேற்பட்டவர்களை கொண்ட குழு 18 மணி நேரமாக நடத்திய தேடுதலில் சடலங்கள் மீட்கப்பட்டன.

மெக்ஸிகோவில் உள்ளூர் சட்ட அமலாக்கதுறையின் குறைபாடுகளின் அடிப்படையில், பல மாகாணங்களில் காணாமல்போனவர்களின் உறவினர்கள் தங்களே தேடல் குழுக்களை உருவாக்கி, தகவல்களைச் சேகரித்து, உடல்களை தேடி, இரகசிய கல்லறைகளை ஆராய்கின்றனர்.

ஜாலிஸ்கோ நியூவா ஜெனரேசியன் மற்றும் சாண்டா ரோசா டி லிமா ஆகியோரின் போதைப்பொருள் குழுக்கள் பல ஆண்டுகளாக குவானாஜுவாடோவில் போதைப்பொருள் வர்த்தகத்தை கட்டுப்படுத்துவதற்காக போட்டியிடுகின்றன. இதற்காக இரு தரப்பும் மனிதப் படுகொலைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மாகாணத்தில் சுமார் ஆறு மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். இந்த ஆண்டு ஜனவரி மற்றும் ஓகஸ்ட் மாதங்களுக்கு இடையில் 2,250 படுகொலைகள் நடந்ததாக பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியில் நடந்த கொலைகளை விட 25 சதவீதத்திற்கும் அதிகமான அதிகரிப்பை இந்த ஆண்டு காண்பிக்கிறது.

செப்டம்பர் பிற்பகுதியில் இராபுவாடோ நகரத்தில் 17 பிளாஸ்டிக் பைகள் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த உடல்கள் மீட்கப்பட்டன.

புதன்கிழமை, அமெரிக்காவின் எல்லையில் உள்ள சியுடாட் ஜுவரெஸில் ஆறு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாக உள்ளூர் போலீசார் தெரிவித்தனர்.

‘அவர்களின் கைகளும் கால்களும் கட்டப்பட்டிருந்தன. தலையில் ஒரு பெரிய அளவிலான துப்பாக்கி சூட்டால் உருவாக்கப்பட்ட காயங்கள் மற்றும் உடலின் பல்வேறு பகுதிகளில் வன்முறையின் தடயங்கள் உள்ளன’ என்று ஒரு போலீஸ் அறிக்கை விரிவாகக் கூறியுள்ளது.

பலியானவர்களில் 3 பேர் கடந்த திங்கட்கிழமை அல்தாமாவின் சுற்றுப்புறத்தில் கடத்தப்பட்டனர்.

சடலங்களுக்கு அருகில் தோட்டாக்கள் எதுவும் கிடைக்காததால், பாதிக்கப்பட்டவர்கள் வேறு இடங்களில் சுடப்பட்டு, அங்கு கொண்டு வந்து போடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

2006 ஆம் ஆண்டில் போதைப்பொருள் விற்பனையாளர்களை கட்டுப்படுத்த மெக்சிக்கோ இராணுவம் களமிறக்கப்பட்டதில் இருந்து, அங்கு வன்முறைகள் உச்ச அளவில் இடம்பெற்று வருகின்றன.

போதைப்பொருள் விவகார மோதல்களில் அங்கு சுமார் 293,000 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here