கரவெட்டி கொரோனா நோயாளி தனிமைப்படுத்தப்பட்ட பின் இரகசியமாக அந்தியேட்டிக்கும் போய் வந்தார்!

யாழ் .கரவெட்டி – இராஜகிராமத்தில் தனிமைப்படுத்தல் முடக்கம் அமுல்ப்படுத்தப்பட்டிருப்பதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார்.

இன்று மாலை ஊடகங்களுக்கு கருத்து தொிவிக்கும்போது அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது மேலும் அவர் கூறுகையில், பேலியகொட மீன் சந்தையுடன் தொடர்பிலிருந்த நிலையில், பருத்துறை மற்றும் கரவெட்டி ஆகிய பகுதிகளில் 3 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர். இந்நிலையில் கரவெட்டி இராஜகிராமத்தை சேர்ந்தவர் கிராமத்தில் பலருடன் பழகியுள்ளார்.

இந்நிலையில் தொற்று பரவலை தடுப்பதற்காக இராஜகிராமத்தில் தனிமைப்படுத்தல் முடக்கம் அமுல்படுத்தப்பட்டிருக்கின்றது.

சுமார் 60 குடும்பங்களை சேர்ந்த மக்கள் அங்கு தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர். அங்கு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டவர்களுக்கு பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

இதேபோல் பாசையூர் மேற்கு மற்றும் குருநகர் பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கும் பீ.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதேவேளை, இராஜகிராமத்தில் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர், பேலியகொட போய் வந்தவர் என்ற அடிப்படையில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் வீட்டில் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளார். எனினும், அவர் தனிமைப்படுத்தல் விதிமுறையை மீறி பலாலியில் நடந்த அந்தியேட்டி நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார்.

நேற்று அந்த நபர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டதையடுத்து, பலாலி அந்தியேட்டி நிகழ்வில் கலந்து கொண்டர்கள் தனிமைப்படுத்தப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here