போலிச் செய்தி வெளியீடு: ரியூப் தமிழ் மீது பாய்ந்தது சட்டம்!

போலிச்செய்தி வெளியிட்டதாக ரியூப் தமிழ் என்ற யூரியூப் குழு மீது புதிய வழக்கு பாய்ந்துள்ளது.

தமிழ் கொடி என்ற பெயரில் இயங்கும் ரியூப் தமிழ் குழுவினர் அண்மையில் கட்டப்பஞ்சாயத்து பாணியில் யாழ் நகரிலுள்ள ஊடகர் ஒருவரை மிரட்டியதுடன், அவரை தாக்கி, அவரது கையடக்க தொலைபேசியையும் பறித்து சென்றனர்.

தொலைபேசியில் மிரட்டியதுடன், வீடு புகுந்து தாக்கிய குற்றச்சாட்டில் அந்த குழுவின் 3 நபர்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் பொலிஸ் நிலையத்திற்குள் நுழைந்து சந்தேகநபர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்ததை திருட்டுத்தனமாக படம் பிடித்ததுடன், பொலிசார் போலி வழக்கு பதிவு செய்து தமது குழுவை சேர்ந்தவர்களை தடுத்து வைத்துள்ளதாக செய்தி வெளியிட்டிருந்தனர்.

இது தொடர்பில் பொலிசார் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தவறான செய்தி வெளியிட்டதுடன், தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்களை இரகசியமாக படம் பிடித்த விவகாரம் வழக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் அந்த குழுவினர் மீது விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நேற்று அந்த குழுவை சேர்ந்த பெண்ணொருவர் யாழ் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

விரைவில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்படவுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here