வாழைச்சேனையில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் இருவரும் சிறுவர்கள்!

கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் செவ்வாய்க்கிழமை மேற்கொண்ட பி.சீ.ஆர் பரிசோதனை மூலம் இரண்டு சிறுவர்களுக்கு கொரோணா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக உள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ஏ.லதாகரன் தெரிவித்தார்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் கொரோணா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு, அவர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனைகள் செவ்வாய்க்கிழமை அறுபது நபர்களுக்கு மேற்கொள்ளப்பட்டது.

அறுபது நபர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை மூலம் இரண்டு சிறுவர்களுக்கு கொரோணா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் இருவரின் தந்தைக்கு ஏற்கனவே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இதன் மூலம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் இன்றுவரை மாத்திரம் 29 பேருக்கு கொரோணா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டு காணப்படுகின்றது.

அத்தோடு மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறக்கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் ஒருவருக்கும், களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பெரியபோரதீவு பட்டாபுரம் பிரதேசத்தில் ஒருவருக்கும் கொரோனா தொற்றுக்கு; கண்டுப்பிடிக்கப்பட்டதையடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் 31 கொரோனா தொற்றாளர்கள் இன்றுவரை இனங்காணப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ஏ.லதாகரன்; தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் தனிமைப்படுத்தல் ஊடரங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை இன்று வியாழக்கிமையுடன் ஐந்து நாட்கள் அமுல்படுத்தப்பட்டதன் காரணமாக மக்கள் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நடைமுறையினை கடைப்பிடிப்பதை அவதானிக்க முடிகின்றது.

வீதிகளில் முக்கிய தேவை ஏதும் இல்லாமல் செல்வோருக்கு எதிராக இராணுவத்தினரும், பொலிஸாரும் தங்களின் கடமைகளை கடுமையான முறையில் கடைப்பிடித்து வருவதனையும் அவதானிக்க முடிகின்றது.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் சகல பிரதான வீதிகளும் வெறிச்சோடி காணப்படுவதுடன், அனைத்து வீதிகளிலும் இராணுவம் மற்றும் பொலிஸாரின் நடமாட்டங்களும், அவசர தேவைகளுக்கான பயணங்களை மேற்கொள்ளும் மக்களின் நடமாட்டங்கள் மாத்திரம் காணப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here