விடுதலைப் புலிகளின் ஆயுதக்கிடங்கை தேடி பொலிசார் அகழ்வு: கிடைத்தது அலவாங்கு!

வவுனியாவில் இன்று பெருமெடுப்பில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்களை தேடி நடத்தப்பட்ட அகழ்வில் அலவாங்கு ஒன்றினை பொலிஸார் மீட்டுள்ளனர்.

மட்டக்களப்பில் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் பொலிஸார் நீதிமன்ற அனுமதியுடன் வவுனியா விளக்குவைத்தகுளம் பகுதியில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்களை தேடி அகழ்வுப்பணி மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது வவுனியா நீதிபதி மற்றும் ஓமந்தை பொலிஸாரும் குறித்த பகுதிக்கு பிரசன்னமாகியிருந்த நிலையில் தீயணைப்பு வாகனங்கள் தரித்து நிற்க கனரக வாகனங்களின் உதவியுடன் சுமார் 10 அடிக்கும் ஆழமாக நிலம் அகழ்வு செய்யப்பட்ட போது அலவாங்கு ஒன்று மதுசார வெற்று ரின் என்பன காணப்பட்டுள்ளன.

இதனையடுத்து தோண்டப்பட்டு கிடங்கு மூடிவிட்டு பொலிஸார் சென்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here