நுவரெலியாவிற்கு சுற்றுலா வராதீர்கள்!

நுவரெலியாவின் அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டுள்ளதால், வார இறுதியிலோ அல்லது அதன் பின்னரான நாட்களிலோ, அங்கு வருவதை தவிர்த்துக் கொள்ளுமாறு மாவட்ட அரச அதிபர் ரோஹன புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.

கிரேகரி ஏரி, விக்டோரியா பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களும், சுற்றுலா ஹொட்டல்களும் மூடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

நுவரெலியாவில் கொரோனா தொற்றுடன் பலர் அடையாளம் காணப்பட்டுள்ளதால், ஆபத்தை ஏற்படுத்தும் பிரதேசமாக கருதி சில முன்னாயத்த நடவடிக்கைகள் மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன், அதிக ஆபத்துள்ள மேல் மாகாணம் போன்ற பகுதிகளிலிருந்து சுற்றுலா பயணிகளை வரவழைத்து ஹொட்டல்களில் தங்க வைப்பதை தவிர்க்குமாறு ஹொட்டல் உரிமையாளர்களிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும தெரிவத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here