பல்டியடித்தவர்களை உங்கள் பக்கமே வைத்திருங்கள்: ஐ.ம.ச!

ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்தபடி பல்டியடித்து 20வது திருத்தத்தை ஆதரித்த ஒன்பது நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து வெளியேற்றப்பட்டதக, எதிர்க்கட்சி பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல நாடாளுமன்ற சபாநாயகருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

வெளியேற்றப்பட்ட 9 நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கும் நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சியில் ஆசனங்களை ஒதுக்குமாறு அந்த கடிதத்தில் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான டயானா கமகே, அ.அரவிந்தகுமார், இஷாக் ரஹ்மன், பைசல் காசிம், எச்.எம்.எம்.ஹரீஸ், எம்.எஸ்.தௌபீக், நசீர் அகமது, ஏ.ஏ.எஸ்.எம்.ரஹீம் ஆகியோரே பல்டியடித்து 20ஐ ஆதரித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here