யாழில் கோட்டா, மஹிந்த படங்களுடன் அதிகாலையிலேயே போராட்டத்தை ஆரம்பித்த அங்கயன் ஆதரவாளர்கள்!

யாழ்ப்பாணம், மருதனார்மட பொதுச்சந்தையில் வர்த்தகத்தில் ஈடுபடும் சிறிலங்கா சுதந்திரக்கட்சி ஆதரவாளர்கள் இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் கோட்டாபய ராஜபக்ச, மஹிந்த ராஜபக்சவின் படங்களை தாங்கியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுன்னாகம் பிரதேசசபை நடவடிக்கைகளிற்கு சுதந்திரக்கட்சியின் பிரதேசசபை உறுப்பினர்கள் தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தும் விதமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக பிரதேசசபையின் ஏனைய கட்சிகள் தொடர்ந்து குற்றம்சுமத்தி வருகின்றன.

இந்த நிலையில் மருதனார்மட சந்தை வியாபாரிகளிற்கு 7 6 என்ற அளவில் இடஒதுக்கீடு சந்தைக்குள் ஒதுக்கப்பட்டு, சந்தைக்குள் நடக்கும் வர்த்தக மாபியா தனத்தை இல்லாமலாக்கும் நடவடிக்கையில் பிரதேசசபை ஈடுபட்டு வருகிறது.

கடந்த காலங்களில் ஒரு வியாபாரி பல இடங்களை பிரதேசசபையிடமிருந்து பெற்று, அதனை அதிக விலைக்கு ஏனையவர்களிற்கு சட்டவிரோத வாடகைக்கு விட்டு கொள்ளை இலாபமடித்து வந்தனர்

தற்போது அந்த நடவடிக்கையும் இல்லாமல் செய்யப்பட்டு, ஒரு வியாபாரிக்கு ஒரு இடம் என்ற அளவில் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.

இதை எதிர்த்து சுதந்திரக்கட்சி ஆதரவாளர்கள் கோட்டாபய, மஹிந்த படத்துடன் இன்று காலை சந்தைக்கு வெளியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here