யாழ்ப்பாணத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா!

யாழ்ப்பாணத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நடத்தப்பட்ட சோதனையில் இது உறுதியானது. அத்துடன், விடத்தல்பளையில் இருக்கின்ற தென்பகுதியைச் சேர்ந்த 37 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பருத்தித்துறையை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவை சேர்ந்த இருவருக்கும் கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஒருவருக்குமே கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேற்படி மூவரும் பேலியகொடை மீன் சந்தைக்கு சென்று வந்தவர்கள். தற்ப்போது தனிமைப்படுத்தளில் இருப்பவர்கள்.
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 243 பேருக்கான கொரோனா தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஏனையவர்களுக்கு தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here