வட்டகொடை நகரம் தற்காலிகமாக மூடப்பட்டது!

கொட்டக்கலை பிரதேச சபைக்குட்பட்ட வட்டகொடை நகரிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் இன்று முதல் நாளை 29 ஆம் திகதி வரை மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக வட்டகொடை வட்டார பிரதேச சபை உறுப்பினர் எஸ்.விஜயகுமார் (அப்பனார்) தெரிவித்துள்ளார்.

வட்டகொடை யொக்ஸ்போட் தோட்டத்தில் 38 வயதுடைய நபர் ஒருவர் பேலியகொடை மீன் சந்தையில் தொழில் புரிந்த நிலையில் வீடு திரும்பியுள்ளார். அவருக்கு கடந்த திங்கட்கிழமை (26) மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனை பெறுபேறு இன்று (28) வெளிவந்த நிலையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. அதேசமயம் அவரின் குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து கொட்டக்கலை பிரதேச சபை தலைவர் ராஜமணி பிரசாந்த் அவர்களின் ஆலோசனைக்கமைவாக வட்டகொடை நகரிலுள்ள அனைத்து கடைகளை இரண்டு தினங்களுக்கு மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளப்பட்டது.

மேலும் வட்டகொடை நகரம் முழுவதும் தொற்றுநீக்கி தெளிக்கப்பட்டு தொற்றுநீக்கம் செய்யப்பட்டது. வட்டகொடை பிரதேசத்தில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here