இராணுவத்தளபதி ஷவேந்திர சில்வா மீதான பயணத்தடை: அமெரிக்க இராஜாங்க செயலாளர் சொன்ன பதில்!

இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு விதித்த பயணத் தடை அமெரிக்காவில் ஒரு சட்டபூர்வமான செயல்முறையாகும் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்கல் பொம்பியோ தெரிவித்துள்ளார்..

இன்று காலை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவுடன் கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது ஒரு நிருபர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பயணத் தடையை அமெரிக்க அரசு தொடர்ந்து மதிப்பாய்வு செய்யும்.

நாங்கள் அதை (தகவல்) தொழில்நுட்ப ரீதியாகவும், உண்மையாகவும், சட்டரீதியாகவும் பெறுகிறோம் என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறோம்.
நாங்கள் அதை தொடர்ந்து செய்வோம் என்றார்.

முன்னதாக இன்று, பொம்பியோவுடனான கலந்துரையாடலின்போது, தனக்கு விதிக்கப்பட்ட பயணத் தடை விவகாரம் பேசப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் தனக்கு அறிவித்ததாக லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்.

அண்மையில் பாராளுமன்ற நடவடிக்கைகளின் போது எதிர்க்கட்சித் தலைவரும் அரசாங்கத்திடம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

யுத்தத்தின் இறுதிக்கட்டங்களில் நடந்த மோசமான மனத உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் தொடர்பில் ஷவேந்திர சில்வா பொறுப்பு கூற வேண்டுமென பல்வேறு சாட்சியங்களின் அடிப்படையில் பல்வேறு மனத உரிமை அமைப்புக்களும் வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here