யானை கூட்டம் ஒன்று கல்முனை மாநகர பகுதியில் ஊடுருவல்

யானை கூட்டம் ஒன்று கல்முனை மாநகர பகுதியில் ஊடுருவியுள்ளதுடன் மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி வருகின்றது.

அம்பாறை காட்டின் ஊடாக கிட்டங்கி, சேனைக்குடியிருப்பு, நற்பிட்டிமுனை எல்லை கடந்து ஊருக்குள் சுமார் 15 க்கும் அதிகளவான யானைககள் பிரவேசித்துள்ளன.

புதன்கிழமை(28) காலை குறித்த யானைகள் குட்டிகள் உள்ளடங்களாக அறுவடை நிறைவடைந்துள்ள வயல்காணிகளை நோக்கி வந்துள்ளது.

அண்மைக்காலமாக இப்பகுதியில் வேளாண்மை அறுவடை நிறைவடைந்துள்ளதை தொடர்ந்து நூற்றுக்கணக்கான யானைகள் இப்பகுதியில் வந்த வண்ணம் உள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

மேலும் கடந்த காலங்களில் காட்டு யானைகளை கட்டுப்படுத்துவதற்காக மின்சார வேலிகளை அமைப்பதாக பல தரப்பினரும் வாக்குறுதிகளை வழங்கியபோதிலும் முறையாக அமுல்படுத்தவில்லை.

-பா.டிலான்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here