இங்கிலாந்தின் ‘பாதுகாப்பான நாடுகள் பட்டியலில்’ இலங்கையும் இணைக்கப்பட்டது!

உலகளாவிய கொரோனா பெருந்தொற்றின் மத்தியில் பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் இஸ்ரேல், உருகுவே மற்றும் இலங்கை ஆகியவற்றை இங்கிலாந்து இணைத்துள்ளது.

நேற்று (19) வியாழக்கிழமை இங்கிலாந்தின் பாதுகாப்பான பயணப் பட்டியலில் இந்த நாடுகள் சேர்க்கப்பட்டன.

நாளை சனிக்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில்- மேற்படி மூன்று நாடுகளில் இருந்தும், நமீபியா, ருவாண்டா, பொனெய்ர், செயின்ட் யூஸ்டேடியஸ் & சபா, வடக்கு மரியானா தீவுகள் மற்றும் யு.எஸ். விர்ஜின் தீவுகள் ஆகிய நாடுகளிலிருந்தும் இங்கிலாந்து செல்பவர்கள் சுய தனிமைப்படுத்தப்பட வேண்டியதில்லை.

இதேவேளை, இந்த வாரம் எந்த நாடுகளும் பாதுகாப்பான பட்டியலில் இருந்து நீக்கப்படவில்லை என்று இங்கிலாந்து போக்குவரத்து செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ் ருவிட்டரில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here