டக்ளஸ் மோதலை தூண்டுகிறார்; கருத்தை வாபஸ் பெற வேண்டும்: தமிழக மீனவர்கள் வலியுறுத்தல்!

இராமேஸ்வரம் மீனவர்கள் நடுக்கடலில் மீண்டும் இலங்கை கடற்படையால் விரட்டியடிப்பு.இலங்கை மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கருத்திற்கு தமிழக மீனவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து இந்திய ஊடகத் தரப்பில் வெளியான செய்தியின்படி-

நேற்று ராமேஸ்வரத்தில் இருந்து சுமார் 450க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடி அனுமதி டோக்கன் பெற்று மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். மீனவர்கள் கச்சத்தீவுக்கும் தனுஸ்கோடிக்கும் இடையே மீன்பிடித்து கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தனர். இதனால் பல லட்ச ரூபாய் நஷ்டத்துடன் ராமேஸ்வரம் மீனவர்கள் கரை திரும்பி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று கிளிநொச்சியில் நடைபெற்ற மீனவர்கள் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட இலங்கை மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடந்த 2 நாட்களுக்கு முன்பு தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கற்கள் மற்றும் கண்ணாடி போத்தல்கள் கொண்டு எறிந்து தாக்குதல் நடத்திய சம்பவம் எனக்கு சந்தோசம் அளிப்பதாக கூறியுனார். இதற்கு ராமேஸ்வரம் மீனவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

அமைச்சர் கருத்து குறித்து ராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவிக்கையில் ஒரு தமிழ் அமைச்சராக இருந்து கொண்டு தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் மகிழ்ச்சி அளிப்பதாக கூறுயது மிகுந்த வேதனை அளிப்பதாகவும், அமைச்சரின் கருத்துக்கு ராமேஸ்வரம் மீனவர்கள் மட்டும்மல்லாமல் தமிழக மீனவர்கள் கடும் கண்டனத்தை பதிவு செய்து கொள்கிறோம்.

இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடந்தி வரும் சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சூழ்நிலையில் மீன் பிடி அமைச்சரின் இந்த கருத்து மிகவும் வருத்தத்தை தருவதாக உள்ளது எனவே அமைச்சர் டக்களஸ் தேவானந்த உடனடியாக இந்த கருத்தை திரும்பப் பெற வேண்டும் என மீனவர்கள் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இரு நாட்டு மீனவர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பது சம்பந்தமாக கிடப்பில் போடப்பட்டுள்ள இந்திய – இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தையை உடனடியாக நடத்த வேண்டும். அதேபோல் கச்சத்தீவு ஒப்பந்தத்தை நடைமுறைபடுத்துவதுடன் கச்சத்தீவை மீட்பது மட்டும்மே இதற்கு தீர்வாக அமையும் எனவே மத்திய அரசு கச்சத்தீவு பிரச்சினை குறித்து மத்திய அரசு இலங்கை அரசுடன் பேசி குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

பலமுறை இந்திய மீனவர்களின் பிரச்சினை குறித்து இலங்கை அரசிடம் பேசுவதற்கு உதவியாக இருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தற்போது இவ்வாறு அவர்கள் கூறியிருப்பது மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் இந்திய படகுகளின் வருகையால் நடுக்கடலில் இரு மீனவர்களுக்கு இடையே சண்டை மூளும் என கூறி இரு நாட்டு தமிழ் மீனவர்கள் இடையே டக்களஸ் தேவானந்தா பிரச்சனையை தூண்டி விடுவதாக மீனவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here