கோட்டா- பொம்பியோ சந்திப்பு!

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பொம்பியோ இன்று காலை ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷவை சந்தித்தார். பின்னர் வெளியுறவு அமைச்சில் தினேஷ் குணவர்த்தனவை சந்தித்தார்.

இலங்கைக்கான அமெரிக்க தூதர் அலினா பி டெப்லிட்ஸும் கலந்துரையாடலில் கலந்து கொண்டார்.

இலங்கைக்கு வருகை தந்துள்ள பொம்பியோவின் அட்டவணை பின்வருமாறு.

ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷவுடன் சந்திப்பு. வெளிவிவகார அமைச்சில் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவை சந்தித்தல் – வெளிவிவகார அமைச்சருடன் கூட்டு பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொள்வது – ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக கொழும்பில் உள்ள கொச்சிகடை ஆலயத்தை பார்வையிட்டுவார். பின்னர் மதியம் 12.30 மணிக்கு மாலைதீவு புறப்படுவார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here