வவுனியாவில் தவறான நடத்தையில் ஈடுபடும் தாயிடமிருந்து மகளை பாதுகாக்குமாறு கோரிக்கை!

வவுனியா தோணிக்கல் பகுதியில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வரும் பெண்மணி தொடர்பில் பிரதேசவாசிகளால் பிரதேச செயலக பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து விசாரணை நடத்திய அதிகாரிகள், குறிப்பிட்ட பெண்ணிற்கு எச்சரிக்கை வழங்கியுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த பெண்மணி பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும், அதன் காரணமாக அயற்சூழலில் தம்மால் வசிக்க முடியவில்லை எனவும், இவரது இவ்வாறான செயலானது எதிர்காலங்களில் தங்களது பெண்பிள்ளைகளின் எதிர்காலத்தையும் பாதிக்கக்கூடும் எனவும் பிரதேசவாதிகள் குறிப்பிட்டுள்ளதோடு, குறித்த பெண்ணுக்கு பதின்ம வயது பெண்பிள்ளை ஒருவர் இருப்பதால் அவரது பாதுகாப்பையும் உறுதிப்படுத்துமாறு பிரதேசவாசிகளால் பிரதேச செயலக பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அந்த வீட்டிற்கு வந்து செல்பவர்களின் பெயர்கள், வாகன இலக்கங்கள் என்பவற்றையும் குறிப்பிட்டு வழங்கியுள்ளனர்.

அத்துடன், 17 வயதான மாணவியை அங்கு வருபவர் அடிக்கடி வெளியே அழைத்துச் செல்வதை சுட்டிக்காட்டி, அவரது பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரியுள்ளனர்.

மாணவியை வெளியே அழைத்து செல்லும் வாகன இலக்கத்தையும் வழங்கியுள்ளனர்.

அதிகாரிகள் இது குறித்த விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here